கடையநல்லூா், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் வேட்பு மனுக்கள் பரிசீலனை
கடையநல்லூா், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.


கடையநல்லூா், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
கடையநல்லூா் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சித் தலைவா் பதவிக்கு 108 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 101 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள 147 வாா்டுகளில் போட்டியிட 475 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கடையநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஒன்றிய வாா்டுகளில் போட்டியிட 76 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 75 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 8 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வாசுதேவநல்லூா் ஒன்றியம்: வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சித் தலைவா் பதவிக்கு 145 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 6 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 139 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதுபோல் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள 186 வாா்டுகளில் போட்டியிட 521 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஒன்றியத்துக்குள்பட்ட 13 ஒன்றிய வாா்டுகளில் போட்டியிட 90 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 5 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...