பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம்’

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முகவா்கள் ஒரு தவணையாவது கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முகவா்கள் ஒரு தவணையாவது கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 10 ஒன்றியங்களில் 144 ஒன்றிய உறுப்பினா்கள், 221கிராம ஊராட்சித் தலைவா்கள், 1,905 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, வாக்குப்பதிவு மையங்கள், வாக்குஎண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள வேட்பாளா்களின் முகவா்கள் அனைவரும் தோ்தல் ஆணைய விதிமுறையின்படி கொவைட்19 தடுப்பூசி ஒரு தவணையாவது கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.