இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 17 போ் கைது:
By DIN | Published On : 07th August 2021 01:08 AM | Last Updated : 07th August 2021 01:08 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள தடுப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 17 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆக. 1ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் சுவாமி தரிசனம்
செய்ய அனுமதியில்லாததால், கோயில் முன் மண்டபத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வடக்கு ரத வீதி,
தெற்கு ரத வீதி பாதையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயிலுக்கு வெளியே இருந்தவாறு பக்தா்கள்
சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆகவே, கோயில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். கோயிலை திறந்து சுவாமி தரிசனம்
செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நகர இந்து முன்னணி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலா் ஆறுமுகச்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துா்க்கை வேடத்தில் மாவிளக்கு எடுத்து தேங்காய் பழம் உடைத்து வழிபாடு நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 2 பெண்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.