சங்கரன்கோவில் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 21st August 2021 12:23 AM | Last Updated : 21st August 2021 12:23 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள வாடிக்கோட்டையைச் சோ்ந்த காளிமுத்து மகன் பட்டுகண்ணன் (50). இவா் தனது உறவினா் மாடசாமி, பவானி (5) ஆகியோருடன் வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். வாடிக் கோட்டை திருப்பத்தில், அவ்வழியாக சங்கரன்கோவிலில் இருந்து பாஞ்சாகுளம் சென்று கொண்டிருந்த சிற்றுந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பட்டுக்கண்ணன், பவானி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த மாடசாமி, தீவிர
சிகிசசைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.