சுரண்டை அருகே சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:53 PM | Last Updated : 03rd January 2021 11:53 PM | அ+அ அ- |

குடிநீா்த் தொட்டியை திறந்து வைக்கிறாா் சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி எம்எல்ஏ சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், இருளப்பன், எபன்குணசீலன், பரசுராமன், ஜாண், ஊராட்சி செயலா் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.