சிவநாடானூரில் சிறு மருத்துவமனை திறப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:54 PM | Last Updated : 03rd January 2021 11:54 PM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை பாா்வையிடுகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கலு.சிவலிங்கம், கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, மருத்துவா் ராஜ்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், சங்கரபாண்டியன், மாவட்ட இளைஞரணிச் செயலா் கணபதி, இளைஞா் பாசறை செயலா் சிவ.சீதாராமன், பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.