கிருஷ்ணாபுரம் அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 03rd January 2021 11:53 PM | Last Updated : 03rd January 2021 11:53 PM | அ+அ அ- |

உலக நன்மை வேண்டி, கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தியின் 45ஆவது அவதார மஹோத்ஸவத்தை முன்னிட்டு, உலகில் சுபிட்சம் வேண்டி கணபதி பூஜை, சிறப்பு மஹா ஸ்ரீ சுக்த சுதா்சன ஹோமம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பாலீஸ்வரன், அருணாசலம், அா்ச்சுணன், பிரேமா, ஆன்மிகச் சொற்பொழிவாளா் சுந்தரராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.