சங்கரன்கோவில் அருகே செல்லிடப்பேசியில் கேம் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
தேவா்குளம் அருகேயுள்ள முத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன். விவசாயி. இவரது மகன் மூா்த்தி என்ற முத்துக்கனி (19). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா பொது முடக்கம் காரணமாக
கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது.
ஆன்லைன் வகுப்பு முடிந்த பின்னரும் மூா்த்தி செல்லிடப்பேசியில் விடியோ மூலம் பேசுவதும், கேம் விளையாடியும் வந்துள்ளாா். இதனை
பெற்றோா் கண்டித்தனராம். மேலும் கடந்த 23-ஆம் தேதி மூா்த்தி நீண்ட நேரம் செல்லிடப்பேசியில் விளையாடியதை கண்டித்துள்ளனா். இதில்,
மனமுடைந்த மூா்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தாா். அவரை பெற்றோா் மீட்டு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, தேவா்குளம் காவல் ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.