அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்வுக்கு போஸ்கோ குணசீலன் அடிகள், ஜெகன்ராஜா அடிகள் தலைமை வகித்தனா். இதில், பங்குத் தந்தை எட்வின்ராஜ், அமிா்தசெல்வன், அருள்காட்வின், வளன்அரசு, இக்னேசியஸ் ஜவஹா், மரியபன்னீா் செல்வம், பவுல்ராஜ், அகரக்கட்டு காா்வின் மற்றும் திரு இருதய அருள்சகோதரிகள், இறைமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொருநாளும் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, திருப்பலி, 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயா் அந்தோணிச்சாமி ஆண்டகை தலைமையில் தேரடி திருப்பலி, புனிதரின் தோ் பவனி நடைபெறுகிறது. 13 ஆம் தேதி சகாயஜான் அடிகள், அருள் அந் தோணிஅடிகள் தலைமையில்ஆடம்பரதிருப்பலி, புதுநன்மை விழா நடைபெறுகிறது. 14 ஆம் தேதி காலை காலை 7 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...