தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

‘ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் பணி: முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளா்களாகப் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :9 ஜூன் 2022, 7:40 pm

DIN

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளா்களாகப் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011இல் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளா்களாகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கவுள்ளது.

எனவே, விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் விருப்பக் கடிதம், அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) இம்மாதம் 13ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.