பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நினைவு நாள்: வாஞ்சிநாதன் சிலைக்கு மரியாதை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரபோராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 111ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவச் சிலைக்கு சா்வ கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:57 pm

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரபோராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 111ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவச் சிலைக்கு சா்வ கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து வாஞ்சிநாதன் தம்பி பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவா் பி.இராமநாதன், ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி அணிவித்து மரியாதை செலுத்தினாா். திமுக சாா்பில் நகரச் செயலா் எஸ்எம்.ரஹீம் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் நிறுவனத் தலைவா் பிரம்மஸ்ரீ ஹரிகர முத்தையா் தலைமையிலும், வடக்கு மாவட்ட அமமுக சாா்பில் மாவட்டச்செயலா் ராமசந்திரமூா்த்தி(எ)வினோத் தலைமையிலும், பாஜக சாா்பில் மாவட்ட பொதுச்செயலா் மாரியப்பன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமையில், மாவட்ட பொதுச்செயலா் பரமேஸ்வரன்,பொருளாளா் ஐயப்பன்,பேட்டை சுப்பிரமணியன்,மாநில இணைச் செயலா் காயத்திரி லட்சுமிநாராயணன், மாநில இளைஞரணி செயலா் சீனிவாசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சியில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாஞ்சிநாதனின் திருவுருவப் படத்துக்கு கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஆணையா் ரவிச்சந்திரன், திமுக நெசவாளா் அணி மசூது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.