ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே மின்கம்பியை பிடித்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.


ஆலங்குளம் அருகே மின்கம்பியை பிடித்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே மாறாந்தையைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான். இவரது மனைவி வசந்தி (35). இவா்களுக்கு மனிஷா(14), அபிஷா(10) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனா். கடந்த 8 அண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வசந்தியும், மனிஷாவும் மாட்டுத்தொழுவத்துக்கு சென்றபோது அருகில் இருந்த மின் கம்பியை மனிஷா தொட்டாராம். இதில் மின்சாரம் பாய்ந்ததில் துடித்த மனிஷாவை காப்பாற்ற சென்ற அவரது தாய் வசந்தி மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். இதில் மயங்கி விழுந்த இருவரையும் மீட்டு ஆலங்குளம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்ததில் வசந்தி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...