ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சிப் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:31 pm

DIN

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சிப் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்து, போட்டியைத் தொடங்கி வைத்தாா். மகளிா் திட்ட இயக்குநா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் மங்களநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 40-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினா் பங்கேற்று தனித்தனி ஊட்டச்சத்து உணவைக் காட்சிப்படுத்தினா். சிறந்த 3 குழுவினா் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலா் ராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் மல்லிகா, ஆனந்தி, வட்டார இயக்க மேலாளா் மாலதி, ஒருங்கிணைப்பாளா் குமுதவள்ளி, மணிமேகலை, சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.