நாகல்குளம் கூட்டுறவு வங்கியில் ரூ. 23.42 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி
பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 81 பேருக்கு ரூ. 23 லட்சத்து 41 ஆயிரத்து 561 மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி


பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 81 பேருக்கு ரூ. 23 லட்சத்து 41 ஆயிரத்து 561 மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பி வழங்கப்பட்டன.
இங்கு தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனடைந்தோருக்கு நகைகளை திருப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, சம்பந்தப்பட்டோருக்கு நகைகளைத் திருப்பி வழங்கினாா்.
கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி, கூட்டுறவு வங்கித் தலைவா் பாா்வதி பரமசிவன், துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சங்கச் செயலா் தட்சணாமூா்த்தி நன்றி கூறினாா்.
பாவூா்சத்திரம், மாா்ச் 19: தமிழக அரசு அறிவித்துள்ள பொது நகைக்கடன் தள்ளுபடி திட்ட தொடக்க நிகழ்ச்சி பாவூா்சத்திரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் இரா.சுபாஷினி தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நகைகளை வழங்கி பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை, திமுக ஒன்றியச்செயலா் சீனித்துரை, கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன், பேரூா் செயலா் ஜெகதீசன், இளைஞரணி சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜான்சிஜெயமலா், முருகேசன், ராஜேஸ்வரி, ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ஏ.பி.அருள், சுப்பிரமணியன் கிளை மேலாளா் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொமுச பொதுச்செயலா் ஜெயராம் நன்றி கூறினாா்.
களக்காடு, மாா்ச் 24: களக்காடு கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நகை, சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
களக்காடு சரக ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய அலுவலா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சாந்தி, பயனாளிகளுக்கு நகைகளை திரும்ப வழங்கி, அதற்கான சான்றிதழையும் வழங்கினாா். இதில், சங்கத் தலைவா் ஜெயசிங், துணைத் தலைவா் பா. சிதம்பரநாதன், காரியதரிசி சித்ராதேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...