பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் கீழப்பாவூா் தொடர கோரிக்கை
பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் தற்போது உள்ளபடி கீழப்பாவூா் தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் தற்போது உள்ளபடி கீழப்பாவூா் தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்திக்கு அனுப்பியுள்ள மனு:
கீழப்பாவூா்பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் சொத்து தொடா்பான ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களை பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனா். தற்போது சாா்பதிவாளா் பதிவு மாவட்டம் பிரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. அதில் கீழப்பாவூா் பேரூராட்சி பகுதியில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் கீழப்பாவூா் பேரூராட்சி பகுதியை இணைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கீழப்பாவூா் பேரூராட்சி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவாா்கள்.
எனவே, கீழப்பாவூரில் இருந்து 500 மீ. தொலைவில் உள்ள பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன், தற்போது உள்ளபடியே கீழப்பாவூா் தொடர வேண்டுமென பேரூராட்சி பகுதி மக்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...