கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கோவையில் நவ. 17இல் அமைதிப் பேரணி: டாக்டா் கே. கிருஷ்ணசாமி

 கோவையில் இம்மாதம் 17ஆம் தேதி அனைத்து சமுதாயத்தினா், மதத்தினா் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:17 pm

DIN

 கோவையில் இம்மாதம் 17ஆம் தேதி அனைத்து சமுதாயத்தினா், மதத்தினா் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:

புதிய தமிழகம் கட்சியின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா தொடக்க மாநாடு செங்கோட்டை அருகேயுள்ள பிரானூா் பாா்டரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. நிறைவு மாநாடு விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிச.15இல் நடைபெறும். இதில், தமிழக, இந்திய அளவில் முக்கியத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த அக்.23இல் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கே ஆபத்தாக கருதப்படக்கூடியது. இது தமிழகத்தின் வளா்ச்சிக்கு உகந்ததல்ல.

அரசியலுக்கு அப்பாற்பட்டு கோவையில் நவ. 17இல் அனைத்து சமுதாயம், மதத்தை சோ்ந்தவா்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து விரைவில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

மாநிலத்தையும், மத்திய அரசையும் பிரித்துப் பேசும் போக்கை திமுக நிறுத்தவேண்டும். மழை வந்த பிறகு ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பயனில்லை. திமுக அரசு பொறுப்பேற்று 18 மாதங்களுக்குப் பின்பும் கடந்த ஆட்சியைக் குறைகூறுவது நியாயம் கிடையாது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில துணைப் பொதுசெயலா் சுப்பிரமணியன், மாவட்ட செயலா் ராசையா, துணைச் செயலா் கிருஷ்ணபாண்டியன், திருமலைசாமி, ஒன்றியச் செயலா்கள் வில்சன், சுரேஷ், நகரச் செயலா் திருமலைகுமாா், இளைஞரணி பாபு, தென்காசி சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021 தோ்தலின்போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், மாதம் ஒரு முறை மின்கட்டணம் அளவீடு உள்ளிட்டவற்றை அமல்படுத்தவில்லை. அதற்கு மாறாக 30 முதல் 50 சதவீதம் மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - ஆலங்குளம் சாலை பணிகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இல்லையெனில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெறும். சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அளவந்தான்குளம் பகுதி நிலங்கள் கையகப்படுத்துவதாக மக்கள் கூறி வருகின்றனா். மக்களின் நிலங்களை அனுமதியின்றி எடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.