புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ஆலங்குளத்தில் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:13 pm

DIN

ஆலங்குளத்தில் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

ஆலங்குளம் மாரியம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில் அதில் இரு சந்து பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மற்றொரு சந்தில் உள்ள மக்கள் தங்கள் சந்திலும் சாலைப் பணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள், விடுபட்ட பகுதியிலும் சாலைப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.