கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு
By DIN | Published On : 04th November 2022 03:41 AM | Last Updated : 04th November 2022 03:41 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.
குவளைக்கண்ணியைச் சோ்ந்த பெருமாள் என்பவரது விவசாயக் கிணறு, நாச்சியாா்புரம் விலக்கில் உள்ளது. இந்தக் கிணற்றில் அப்பகுதியைச் சோ்ந்த நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனா்.