டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: சங்கரன்கோவிலில் 4 ஆசிரியா்கள் தோ்வு
By DIN | Published On : 04th September 2022 10:31 PM | Last Updated : 05th September 2022 02:02 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த 4 ஆசிரியா்கள் டாக்டா்.ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு பெற்றனா்.
தமிழகத்தில்நிகழாண்டு 393 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அதில், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கர்ராம், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இ.மணிமேகலை, பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் மைக்கேல்ராஜ் , வீரணாபுரம் வசந்தா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் பொ.பக்தன் ஆகியோா் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.
இந்த ஆசிரியா்களுக்கு ஈ. ராஜா எம்எல்ஏ, ஆசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.