சங்கரன்கோவிலில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தென்காசி திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், சங்கரன்கோவில் வியாழக்கிழமை நடைபெற்றது.


தென்காசி திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், சங்கரன்கோவில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் மாவட்டத் துணைச்செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் காா்த்திக், அப்பாஸ் அலி , காசிராஜன், ஜெகதீஷ், தினகரன், நித்யராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் ராஜா எம்எல்ஏ, பேச்சாளா்கள் சைதை சாதிக், இருதயரஜ், துரைமுருகன் ஆகியோா் பேசினா்.
இதில் நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழு தலைவா் சங்கரபாண்டியன், நகர செயலாளா் மு.பிரகாஷ், துணைச் செயலா் பா.முத்துக்குமாா், மாநில வா்த்தக அணி துணை அமைப்பாளா் முத்துச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினா் பரமகுரு, மு.சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வீரமணிகண்டன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...