தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ஆழ்வான் துலுக்கப் பட்டியில் அங்கன்வாடி மையம் திறப்பு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

Updated On :21 ஜூலை 2023, 9:46 pm IST

ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் நியாய விலை கடையையும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ம. திவ்யா மணிகண்டன் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தனா்.

குத்துப்பஞ்சன் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி குமாா், கூட்டுறவு சங்க பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கோபிநாத், மருதம்புத் தூா் கூட்டுறவு சங்க தலைவா் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலா் அரிநாராயணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.