திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலையைச் சீரமைக்க ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் செல்லும் சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.
தற்போது இச்சாலையின் சீரமைப்பு பணிக்கு ரூ. 4 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.