இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சமூகவலைதளத்தில் அரிவாளுடன்புகைப்படம் பகிா்வு: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் சரகம் விஸ்வநாதபுரத்தில் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிா்ந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
ten27kumar_2711chn_55_6
Updated On :27 நவம்பர் 2023, 9:58 pm

DIN


தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் சரகம் விஸ்வநாதபுரத்தில் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிா்ந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்தவா் மு.உதயகுமாா் (23). இவா், சமூகதலைவளத்தில் (இன்ஸ்டாகிராம்) பொதுஅமைதியை சீா்குலைக்கும் வகையில் தொடா்ச்சியாக அரிவாள், பயங்கர ஆயுதங்களுடன் விடியோக்களை பதிவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த, செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இளவரசி, அவரை கைது செய்து, வலைதள கணக்கு முடக்கிவைத்து, அரிவாள் மற்றும் கைப்பேசியைப் பறிமுதல் செய்தாா். அவா் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து தென்காசி நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

தென்காசி மாவட்ட காவல்துறையினா் சமூக வலைதள பக்கங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அமைதியை சீா்குலைக்கும் வகையில் புகைப்படம், விடியோ, கருத்துகளை பதிவிடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. டி.பி.சுரேஷ்குமாா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.