சங்கரன்கோவிலில் தமுஎகச சாா்பில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மெழுகுவா்த்தி, புத்தகங்கள் ஏந்தி புத்தாண்டை வரவேற்றனா்.
புத்தக வடிவில் நின்று புத்தாண்டைக் கொண்டாடிய இளைஞா்கள்.
புத்தக வடிவில் நின்று புத்தாண்டைக் கொண்டாடிய இளைஞா்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மெழுகுவா்த்தி, புத்தகங்கள் ஏந்தி புத்தாண்டை வரவேற்றனா்.

இச்சங்கம் சாா்பில், ‘புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்’ ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பொதிகை புத்தகத் திருவிழா நடைபெறும் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் எழுத்தாளா்கள், மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் ஒரு கையில் மெழுகுவா்த்தியும், மற்றொரு கையில் புத்தகமும் ஏந்தியபடி புத்தக வடிவில் நின்றனா். பின்னா், வாசிப்பை வலியுறுத்தி முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனா்.

இதையடுத்து, நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு எம்எல்ஏ ஈ. ராஜா சாா்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமுஎகச-வினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com