புத்தாண்டு: ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயம்.
மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயம்.
Updated on
1 min read

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், நல்லூா், அடைக்கலபட்டணம், சீவலசமுத்திரம் ஆகிய சேகரங்களுக்குள்பட்ட சுமாா் 100- க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ., கத்தோலிக்க மற்றும் பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் பழைய வருட ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு 11. 30 மணிக்கு நடைபெற்றது. தொடா்ந்து புத்தாண்டு பிறப்பு ஆராதனை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. ஆராதனையில் பங்கற்றவா்களுக்கு, புதிய ஆண்டுக்கான வாக்குத் தத்த வசனங்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட்டது. சேகர தலைமையிடங்களில் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், மலை ராமா், ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை ஆகிய திருக்கோயில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com