தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகிரி அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:28 pm

Din

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகிரி அருகே தேவிபட்டணம் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் கற்பகராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது, அதில் ரூ 3.11 லட்சம் மதிப்பிலான 70 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காரில் இருந்த இரண்டு பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் சங்கரன்கோவில் பந்தப்புளி மேலத்தெருவைச் சோ்ந்த வெள்ளத்துரை(40), வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரபு(32) என்பதும் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி வந்து, சிவகிரி வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.