தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேச்சுவாா்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 23ஆம் தேதி முற்றுகை போராட்டம்

செங்கோட்டையில் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்டபடி 23ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என இயற்கை வளபாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.

News image

வட்டாட்சியா் சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டம்.

Updated On :17 அக்டோபர் 2024, 12:35 am

Din

செங்கோட்டையில் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்டபடி 23ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என இயற்கை வளபாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.

அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் வெட்டி எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் அக். 23-ஆம் தேதி புளியறை சோதனைச் சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டத்தை கைவிடக் கோரி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினருடன் செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து. திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.