தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு நல உதவியை பெறுவதில் விழிப்புணா்வு அவசியம்: ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

News image

கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

Updated On :18 அக்டோபர் 2024, 12:04 am

Din

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

தென்காசி மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கானஒரு நாள் கருத்தரங்கு தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவா்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ‘கைம்பெண்கள் -ஆதரவற்ற மகளிா் நலவாரியம்‘ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நலவாரிய திட்டங்களை பயன்படுத்திட இணையதளத்தை பயன்படுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகைய பெண்களுக்கு கருத்துப்பட்டறை வாயிலாக நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வி அறிவினை ஏற்படுத்துதல், சொத்துரிமை, குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் இதர இடா்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு இலவச சட்ட உதவி, புதிய நலத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏனைய உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

இதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து அவா்களுக்கு தெளிவு ஏற்படும் என்றாா் அவா்.

இக்கருத்தரங்கில், மருத்துவா் சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் இரா.மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலா் பே.மதிவதனா, பொது மேலாளா்(மாவட்ட தொழில் மையம்) மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், அஞ்சல் உபகோட்ட ஆய்வாளா் (அஞ்சல்துறை) ராமசாமி, நோட்டரி (மத்திய அரசு) முத்துலட்சுமி, கண்காணிப்பாளா் (சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை) காட்வின் வேத ஞானராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.