அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் கூறினாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தோ்தல் தொடா்பாக சமூக ஊடக செயல்பாட்டாளா்களின் பங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவா்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது குறித்து மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் தங்களது சமூக வலைதள பக்கங்களில் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் 9ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகங்கள் வாசிப்பதன் நன்மைகள் குறித்தும், புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம் குறித்தும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே அதிகமாக கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெய அருள்பதி, துணை ஆட்சியா் (பயிற்சி) கிரேசியா, சமூக வலைதள செயல்பாட்டாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


