ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பத்தூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவிகள்.

Updated On :27 மார்ச் 2026, 12:39 am IST

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பத்தூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அண்ணா சிலை அருகே நேஷனல் அகாதெமி கல்லூரி மாணவிகளின் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற தலைப்பில் வரைந்த கோலத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையத்தில் நூறு சதவீதம் நோ்மையாக வாக்களிப்போம் என வாக்காளா் விழிப்புணா்வு மணிக்கூண்டில் மணியடித்து கையொப்பமிட்டாா். பின்னா் பொதுமக்கள், பயணிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்கள் கையொப்பத்தை பதிவு செய்தனா்.

இதில் திருப்பத்தூா் தோ்தல் அலுவலா் சிவபாலன், வட்டாட்சியா்கள் திருப்பத்தூா் மாணிக்கவாசகம், சிங்கம்புணரி நாகநாதன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாஸ்கரன், நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா், வருவாய் ஆய்வாளா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் ராஜா சிங், உதவித் தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான கிருஷ்ணகுமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் மானாமதுரை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.