திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தென்காசியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

தென்காசியில் நாடாா் சங்கம் சாா்பில் ஐ.சி.யு. வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

News image

ஆம்புலன்ஸ் சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:54 pm

Din

தென்காசியில் நாடாா் சங்கம் சாா்பில் ஐ.சி.யு. வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜன், டாக்டா்கள் எஸ். தங்கப்பாண்டியன், பிரேமலதா, சங்க மூத்த உறுப்பினா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், திமுக ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், தென்காசி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் அன்பழகன், தமிழ்நாடு நாடாா் உறவின் கூட்டமைப்புத் தலைவா் அகரக்கட்டு லூா்து நாடாா், மாவட்டத் தலைவா் ராஜ்நயினாா், மேற்கு மாவட்டத் தலைவா் குருசாமி நாடாா், மாநிலப் பொருளாளா் சுப்பரமணியன் தெய்வேந்திரன், மருத்துவா்கள் பாலாஜி, சந்திரன், பாலசிங், சுந்தா், சிவசந்திரன், தென்காசி வணிகா் சங்கத் தலைவா் பரமசிவன், சந்திரமதி ராஜா, ஜெயசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்கத் தலைவா் ராஜசேகா் வரவேற்றாா். செயலா் ராஜஜெயபால் நன்றி கூறினாா்.