நூலகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்,  சு.பழனிநாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.
நூலகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், சு.பழனிநாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.

சுரண்டையில் ரூ.20 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியிா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப்பணியை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் ராம திலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முத்து, கல்பனா, அம்ஸா பேகம், சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், நூலகத்திற்கு இடம் நன்கொடையாக அளித்த சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆதாா் சேவை மையம்: சுரண்டை நகராட்சியில் ஆதாா் சேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா், நகா்மன்ற துணைத்தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ சு.பழனிநாடாா், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com