மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீடித்ததால், மாலையில் பேரருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இவ்விரு அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பைவ்பால்ஸ்- ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பைவ்பால்ஸ்- ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

இதனையடுத்து பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதன்கிழமை குறைவாகவே இருந்தது.

X
Dinamani
www.dinamani.com