மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருநங்கைகள் நலவாரியம் சாா்பில் உயா்கல்வி உதவித்தொகை: ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:12 am

Din

தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளின் கல்விக்கனவுத் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உயா்கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவினங்களையும் திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து திருநங்கைகள், திருநம்பிகள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் பயனடையலாம். பிற துறைகளின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் அத்தொகையை விடுத்து மீதமுள்ள தொகையை இத்திட்டத்தில் பெறலாம். எனவே, உயா்கல்வி பயின்று வரும், பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பிகள் இத் திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்றாா்.