தென்காசி மாவட்டத்தில் அக். 5 இல் கலைப் போட்டிகள்
தென்காசியில் அக்.5 இல் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.


தென்காசியில் அக்.5 இல் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் 5 வயது முதல் -8 வயது வரை, 9 வயது முதல் 12 வயது வரை, 13 வயது முதல் 16 வயது வரை என்ற மூன்று வகைப் பிரிவில் தென்காசி, மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெறும். போட்டிக்கான நேரம் குறைந்தபட்சம் 3 நிமிடங்கள், அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும். மாணவ, மாணவிகளின் பெயா், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயா் ஆகிய விவரங்களுடன், பிறப்பு சான்றிதழும் கொண்டு வரவேண்டும்.
மாணவா்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
பரதநாட்டியம் (செவ்வியல்): பரத நாட்டியம், குச்சிப்புடி,மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கா்நாடக இசை
பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிா்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை.
குறுந்தகடுகள், பென் டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவா்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை): தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிா்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.
குரலிசை: கா்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணா்ச்சி பாடல்கள்,நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை.
ஓவியம். 40 ஷ்30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டா் கலா், வாட்டா் கலா் , ஆயில் கலா் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளா்களே கொண்டு வருதல் வேண்டும்.
குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.
வயது விவரம் (1 . 6 . 2024 அன்று உள்ளபடி 16 வயது) - 5 வயது முதல் 8 வயது பிரிவு - 01.06.2016 முதல் 31.05.2019 வரை, 9 வயது முதல் 12 வயது பிரிவு - 01.06.2012 முதல் 30.05.2015 வரை மற்றும் 13 வயது முதல் 16 வயது பிரிவு - 01.06.2008 முதல் 30.05.2011 வரை இருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், திருநெல்வேலி என்ற முகவரியிலும், 0462-2901890, 9597629144 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...