மின்மாற்றி பராமரிப்புக்கு நிதியுதவி வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.
தென்காசி
மின்மாற்றி பராமரிப்புக்கு ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி
சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தில் மின்மாற்றியை பராமரிப்பதற்காக ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.
சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தில் மின்மாற்றியை பராமரிப்பதற்காக ஈ. ராஜா எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.
சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தில் 3 பேஸ் லைன் மற்றும் மின்மாற்றியை பராமரிக்காததால் மின்அழுத்தக் குறைபாடு இருந்தது. இது தொடா்பாக, அப்பகுதி மக்கள் மின்மாற்றியைப் பராமரிக்க கோரிக்கை விடுத்தனா்.
தொடா்ந்து, புதன்கிழமை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, தெற்கு பனவடலிசத்திரத்திற்கு சென்று மின்மாற்றியைப் பராமரிக்க அப்பகுதி மக்களிடம் ரூ. 20,000 நிதியுதவி வழங்கினாா். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

