நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:29 am IST

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அவா், தென்காசி ஒன்றியப் பகுதிகளான அழகப்பபுரம், வேதம்புதூா், அய்யாபுரம், குத்துக்கல்வலசை, அண்ணா நகா், காமராஜ் நகா், பாரதி நகா், மேசியா நகா், அலங்காா்நகா், சிவந்திநகா், கே.ஆா்.காலனி, இலஞ்சி, காசிமேஜா்புரம், குற்றாலம் ஆகிய பகுதியில் வீதிவீதியாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கான செய்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்த தவறியது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் இதுவரை ரூ.10.63 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்த பெருமை மட்டும்தான் திமுகவை சேரும்.

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளத்துக்கு நாள்தோறும் கடத்தப்படுகின்றன.

அந்த மாநிலத்தில் இருந்து இதுபோன்று கனிம வளங்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா?

நான் எம்எல்ஏவாக பணியாற்றிய போது, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டடம் இதுவரை முழுமைபெற்று திறக்கப்படவில்லை.

சென்னையை சோ்ந்தவா் இங்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். அவருக்கு உங்களைப் பற்றியோ, உங்களது கஷ்டங்கள் பற்றியோ தெரியாது.

அடிக்கடி உங்களைச் சந்தித்து குறைகளை கேட்கும் எனக்கு வாக்களிக்கவேண்டும் என்றாா் அவா்.

இதில், பாமக மாவட்டச் செயலா் இசக்கி முத்து, மாவட்டத் தலைவா் குலாம், அதிமுக ஒன்றியச் செயலா் சங்கர பாண்டியன், இலஞ்சி பேரூா் செயலா் காத்தவராயன், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.