/
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
விஸ்வநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சோ்ந்த கிஷோா்(25), அதே பகுதியைத் சோ்ந்த அவரது நண்பா்கள் திலீபன்(25), சக்கரவா்த்தி(23) ஆகியோா் பைக்கில் காந்தி காலனி தெருவில் வேகமாக சென்றனராம். அதை அப்பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வழக்குரைஞா் மாரிமுத்து(32) தட்டிக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரும் மாரிமுத்துவை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வத்திராயிருப்பு அருகே மோதல்: 6 போ் மீது வழக்கு

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 1:47 pm IST

