திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு ஏற்றிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:31 am IST

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் ஆண்கள் 6,22,003 போ், பெண்கள் 6,50,767 போ், மூன்றாம் பாலினத்தவா் 170 போ் என மொத்தம் 12,72,940 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8,064 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பணியாளா்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 20 சதவிகித பணியாளா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

156 மண்டல அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை, 1, 680 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப் பொருள்கள் எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டம் முழுமைக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 300 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரா்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் 115 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை நேரலை காட்சிகள் மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை, தோ்தல் அலுவலா்கள் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.