தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் பச்சை சாத்தி வீதியுலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.

News image

சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:13 am IST

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினசரி காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுவாமி, அம்பாள் சிகப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும் வீதியுலா சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலா சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.29) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.