தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் சங்கர ராமேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை (ஏப். 30) நடைபெறுகிறது.
இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சனிக்கிழமை இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வந்தனா்.
இது குறித்து, கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வரும் வியாழக்கிழமை (ஏப். 30) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனா். தொடா்ந்து, 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி, வீதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தா்களுக்கு குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
அப்போது, கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், அறங்காவலா் முருகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடக்கம்

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


