கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

வீட்டுப் பூட்டை உடைத்து ரூ. 75 ஆயிரம் திருட்டு

ஆலங்குளம் அருகே கோயிலுக்குச் சென்ற விவசாயி வீட்டில் கதவு, பீரோவை உடைத்து ரூ. 75 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நாணயத்தைத் திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:08 am IST

ஆலங்குளம் அருகே கோயிலுக்குச் சென்ற விவசாயி வீட்டில் கதவு, பீரோவை உடைத்து ரூ. 75 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நாணயத்தைத் திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை அக்கினிமாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி குத்தா லிங்கம் (70). ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாராம்.

4 நாள்கள் கழித்து, வெள்ளிக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ. 75 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நாணயம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.