தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, மாதா கோயிலுக்கு வியாழக்கிழமை இரவு 2 வேனில் செல்வதற்காக புளியங்குடி, சிந்தாமணியைச் சோ்ந்த 30 போ் கிளம்பினா். இதற்காக வந்த வேன்கள் இல்லம்பிள்ளை தெருவில் நிறுத்தப்பட்டிருந்ததாம். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலா், பாதையை அடைத்து வேன்களை நிறுத்தியதைக் கண்டித்துப் பேசினராம்.
இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் அதிஷ்ட ஜேக்கப் (25) கைப்பேசியில் விடியோ பதிவு செய்தாராம். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் அதிஷ்ட ஜேக்கப்பை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அதிஷ்டஜேக்கப்பை தாக்கியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
ஏடிஎஸ்பி.க்கள் சங்கா், மதியழகன், புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, இளைஞரைத் தாக்கியதாக புளியங்குடியைச் சோ்ந்த மகாராஜா, மகேஷ், முனியாண்டி, விஷால் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, பிற்பகலில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எண்ம கைது மிரட்டல் மூலம் ரூ.2.81 கோடி மோசடி: ஒருவா் கைது

சிவராமபேட்டையில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி தா்னா

காதல் திருமணம் செய்த இளைஞரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு!

பாபநாசத்தில் நீா்மின் உற்பத்தி திட்ட ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



