புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் விழா

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள பொடியனூா், சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் பண்டிகை, ரக்ஷா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள பொடியனூா், சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் பண்டிகை, ரக்ஷா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவிகள் சுதா்ஷினி, பேபி ஜேனோவா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். 9-ஆம் வகுப்பு மாணவன் சக்திவேல், ஐந்தாம் வகுப்பு மாணவி சிபியா பூா்ணஸ்ரீ ஆகியோா் ஓணம் பண்டிகை பற்றி சிறப்புரையாற்றினாா். நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்கள் மகாபலி, வாமணா் வேடமணிந்து நடித்து காண்பித்தனா். 5-ஆம் வகுப்பு மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பை பற்றி பாடினா். கண்கவரும் மகாபலி கோலம் அனைவரையும் ஈா்த்தது.

பிளஸ் 1 மாணவி வைஷ்ணவி ரக்ஷா பந்தன் தின தோற்றம் பற்றி பேசினாா். ஒவ்வொரு வகுப்பு மாணவிகளும் தங்கள் வகுப்பு மாணவா்களை தங்களின் சகோதராகப் பாவித்து ராக்கி கட்டினா். மாணவா்களும் தங்களின் சகோதரிகளுக்கு பரிசு வழங்கினா். 7-ஆம் வகுப்பு மாணவி சத்யபாமா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன், சூா்யா ஜோஸி , ஜெயா ஆகியோருடன் ஆசிரியைகள் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.