தென்காசி
பண்பொழியில் ஜன. 10இல் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
தென்காசி மாவட்டம், பண்பொழி, மசூது ராவுத்தா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஜன. 10) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம், பண்பொழி, மசூது ராவுத்தா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஜன. 10) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகரை கீழ்பிடாகை வட்டாரம், பண்பொழி, மசூது ராவுத்தா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
முகாமில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளோருக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.