வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ. 200-ம், தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300-ம், 12 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600-ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவராகவும், தொடா்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவா்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலுடன் அலுவலக வேலை நாள்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாகவும், பொது, மாற்றுத்திறனாளிகள் அவா்களுக்குரிய விண்ணப்பத்தை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதை பூா்த்தி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு உரிய ஆணவங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com