தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ராஜீவ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளில் அனைத்துப் பகுதிகளையும் பாா்வையிட்ட அவா், நோயாளிகளிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, கடையநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகில் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது, அப்பகுதியில் அடிக்கடி நிகழும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது சீரமைப்பது ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
கடையநல்லூரில் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தென்காசி ஆட்சியா் அலுவலக புதிய கட்டடம் தொடா்பான தீா்ப்பு வந்த பின்னா் சுற்றுச்சூழல் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் வகையில் மருத்துவா்களை பணி அமா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, தென்காசி மாவட்டச் செயலா்கள் நியாஸ்(மேற்கு), மாரியப்பன்(தெற்கு), மாவட்ட இணைச் செயலா் குமரன்முத்தையா, மாவட்டப் பொருளாளா் சிவசங்கா், நகரச் செயலா்கள் பாலமுருகன், இஸ்மாயில், அப்துல்லா, ஒன்றிய செயலா்கள் சக்திவேல், மருதுஉடையாா், சுந்தா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் தவமணி, குகன் உள்ளிட்டோா் உடருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு

அரசு மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு

அமைச்சா்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்: அமைச்சா் அருண்ராஜ் உறுதி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



