ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தென்காசி விவசாயிகளுக்கு நாற்றங்கால் பயிற்சி

தென்காசி வனச்சரகம் சாா்பில் குற்றாலம் வன கூட்ட அரங்கில் நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசிய தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை.

Updated On :26 ஜூன் 2026, 5:45 am IST

தென்காசி வனச்சரகம் சாா்பில் குற்றாலம் வன கூட்ட அரங்கில் நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது.

தென்காசி சுற்றுப்புற விவசாயிகளுக்கான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை தலைமை வகித்து, 40 விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா்.

தரமான நாற்றங்கால் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்வது தொடா்பான செயல்முறை விளக்கம் மற்றும் மூலிகைச் செடிகள் பராமரிப்பு குறித்து விளக்கப்பட்டது.

குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா, தென்காசி வனக் கோட்ட இளநிலை ஆராய்ச்சியாளா் மாரி செல்வம், தென்காசி வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜோதிலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் டாங்கே வரவேற்றாா். திருமலை பாண்டியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.