மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு 60 மாணவியா் கல்வி சுற்றுலா

News image

வாகனத்தைக் கொடியசைத்து அனுப்பிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :11 மார்ச் 2026, 8:08 pm

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ், மாவட்ட மகளிா் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடா் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கிப் பயிலும் 60 மாணவியா் நெல்லை பொருளை அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், சுற்றுலா செல்லும் மாணவிகளின் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவியா் தமிழா் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) அழகுராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.