பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-ஆம் தேதிக்குள் முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்டத்தில் அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-ஆம் தேதிக்குள் முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகள் விவரம் சேகரிக்கப்பட்டு இதுவரை 74.38 சதவீதம் விவசாயிகள் அடையாள எண் பெற்றனா்.

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில் கௌரவ ஊக்கத்தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண் பெறுவது அவசியம். பி.எம்.கிசான் திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளில் இதுவரை 4,306 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனா்.

இனிவரும் காலங்களில் இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே பி.எம்.கிசான் கௌரவ நிதித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள எண்கள் வழங்கும் முகாம் மே 11 முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 60,742 விவசாயிகளுக்கு இந்த முகாம்கள் மூலம் அடையாள எண்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை அடையாள எண் பெறாத 10700 விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதாா் நகல், நில ஆவணங்கள் நகல்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம், வேளாண்மை விரிவாக்க மையம், கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்தப் பதிவை மேற்கொள்ள மே 30-ஆம்தேதி கடைசி நாளாகும். எனவே, அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.